Welcome Guest [login]

Nakkeeran.com Blog

பி.இ., முதற்கட்ட கவுன்சிலிங்கில் 37,216 பேருக்கு இடம்
written by admin,
2010-07-21 12:54:26.0
 

நேற்றுடன் முடிந்த முதற்கட்ட பொறியியல் கவுன்சிலிங்கில், 37 ஆயிரத்து 216 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங் முடிவில், மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகளில், ஒரு இடம் கூட நிரம்பவில்லை.

    நேற்றைய கவுன்சிலிங் முடிவில், அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில்
  • 1,635 இடங்கள்
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 71 இடங்கள்
  • தனியார் கல்லூரிகளில் 71 ஆயிரத்து 733 இடங்கள்
  • என மொத்தம் 73 ஆயிரத்து 439 இடங்கள் காலியாக உள்ளன.
  • ஏரோநாட்டிக்கல் பிரிவை 627 பேர்
  • ஆட்டோமொபைல் 328,
  • பயோ டெக்னாலஜி 469,
  • சிவில் 2,954,
  • கம்ப்யூட்டர் சயின்ஸ் 5,882,
  • இ.சி.இ.,
  • 9,096,
  • இ.இ.இ., 4,663,
  • இ., அண்டு ஐ., 931,
  • ஐ.டி., 3,493,
  • மெக்கானிக்கல் 6,218,
  • தமிழ் பயிற்று மொழி சிவில் 110,
  • தமிழ் பயிற்று மொழி 99,
  • இதர பிரிவுகளை 2,346 பேர் தேர்வு செய்துள்ளனர்.

மாணவர்கள் கவுன்சிலிங்கிள் தேர்வு செய்த பிரிவுகளை பற்றி கருத்துகளை தெரிவிக்கலாம்......

  comment
No comments to display.. click comment button for your comments

இனி விமானப் பயணம் பயங்கரம் : புதிது புதிதாக கேள்விகள்
written by admin,
2010-05-24 18:53:27.0
 

மங்களூரில் நடந்த விமான விபத்தால், இந்திய வான்வெளியானது விமானப் பயணிகளுக்கு ஆபத்தான இடமா என்ற கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. விமானப் பயணம் என்றால் பயங்கரமா என்ற முறையில் கருதும் அளவுக்கு அதிக பிரச்னையை எழுப்பியுள்ளது.

மங்களூரில் நேற்று முன்தினம் நடந்த விமான விபத்தில், 158 பேர் பலியாயினர்; எட்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்திற்கு விமான பைலட்டின் தவறு காரணமாக இருக்கலாம் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சமீப மாதங்களில் பைலட்களின் நடத்தைகள் குறித்து தீவிரமாக ஆ#வு ö?#யப்பட்டு வருவதே காரணம். மேலும் மங்களூரு விமானதளம், "டேபிள் டாப்' போன்று வித்தியாசமானது, அதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. இந்த விபத்திற்குப் பின் பல்வேறு வகையான தகவல்கள், உலக அளவில் விமானங்கள் ö?யல்படும் விதம் என்று விவாதம் அதிகளவில் அந்தந்த துறை நிபுணர்களால் விமர்சிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மோதிக் கொள்ளும் அளவுக்கு விமானங்கள் ö?ன்று, பின்னர், அதிர்ஷ்டவசமாக அவை தவிர்க்கப்பட்டதாக, 15 நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில், பல சம்பவங்களில் பைலட்கள் குடிபோதையில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

இருந்தாலும், விமானங்கள் மோதிக்கொள்ளும் அளவுக்கு ö?ன்ற சம்பவங்கள் எந்த தேதிகளில் நடந்தன என்ற விவரத்தை சிவில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம் வெளியிடவில்லை. விமானங்கள் மோதிக் கொள்ளும் அளவுக்கு ö?ன்றதற்கு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் பைலட்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, இரு தரப்பினரும் கடுமையான நிர்பந்தங்களின் கீழ் பணியாற்றுவது, குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் வருகையால், பெரிய விமான நிலையங்களுக்கு வந்து ö?ல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தது போன்றவை உட்பட பல பிரச்னைகள் காரணமாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது.

அதனால், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு உட்பட உலக நாடுகளில் விமான போக்குவரத்து நிர்வாகத்தினர், குடித்து விட்டு விமானங்களை ஓட்ட முன்வரும் பைலட்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். சகிப்புத் தன்மைக்கு இடம் தரக்கூடாது என, நிபுணர்கள் கூறியுள்ளனர். அது மட்டும் அல்ல, விமான தளத்தில் நவீன கன்ட்ரோல் வசதிகள், கட்டுப்பாட்டு நடைமுறைகள் பற்றியும் பல்வேறு புதிய உத்திகள் பற்றி பேசப்படுகிறது.மங்களூரு விபத்தில், தொடர்ந்து ஒன்பது மணி நேரம் ஓட்டியதால் ஏற்பட்ட சிறிய அயர்வில், பைலட்கள் செய்த தவறாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.ஏனெனில், இந்த விமானம் புதிய விமானம் என்றும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட அதிக ?õத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.


  comment
No comments to display.. click comment button for your comments

அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை: கோர்ட் தீர்ப்பு -மக்கள் கருத்து
written by admin,
2010-05-06 15:55:23.0
 

மும்பை தாக்குதல் தொடர்பான 86 வழக்குகளிலும் அஜ்மல் கசாப் குற்றவாளி என்று நீதிபதி தஹில்யானி அறிவித்திருந்தார்.கடந்த திங்கட்கிழமை, கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கசாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கசாப்பிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தஹில்யானி கூறினார். தீர்ப்பை கேட்டதும் அஜ்மல் கசாப் கோர்ட்டில் கதறி அழுதான்..

மக்கள் தங்கள் தீர்ப்புகளை தெரிவிக்கலாம்


  comment
senthilnathan from India ,
2010-07-17 13:37:54.0

இந்த தீர்ப்பு மிக சரியானது ஆனால் இழந்த பல உயிர்களையும் செலவிட்ட பல கோடிகளையும் யார் தருவது ?

thirumoorthi from India ,
2010-07-17 13:33:22.0

தீர்ப்பு மிகச்சரியானது .ஆனால் இழந்த உயிர்களையும் இழந்த பல கோடிகளையும் யார் தருவது ?

Raja chandra sekaran from India ,
2010-07-08 03:31:58.0

ithu pondra kodoora naikalai udambu muzhukka thuppakkiyal suttu thulaikkavendum

sithik from India ,
2010-07-02 13:58:24.0

இந்த தீர்ப்பு மிகவும் தாமதமான தீர்ப்பு தண்டனை உடனே நெறைவற்ற பட வேண்டும்.

sasi from India ,
2010-06-16 14:21:08.0

result is too late.

antony from United Arab Emirates ,
2010-05-28 13:36:18.0

immediately toing

m.antonyvinobaji from India ,
2010-05-28 13:10:13.0

immediately doing

Zeevam from India ,
2010-05-25 21:11:25.0

வுடனே நிறைவேறட்டும் .

R,ASOKAN TAILOR .NACHIKULAM from India ,
2010-05-17 10:44:38.0

AVANAI EIDUVARAIKKUM VAITTURUPPADHE TAPPU

siva from India ,
2010-05-15 21:32:16.0

immediately doing


ஐ.பி.எல்., விருது யாருக்கு?
written by admin,
2010-04-20 10:48:55.0
 

ஐ.பி.எல்., விருதுக்கு முரளி விஜய், ராபின் உத்தப்பா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மும்பையில், வரும் 23ம் தேதி சகாரா நிறுவனம் சார்பில் ஐ.பி.எல். விருது வழங்கும் விழா நடக்கிறது. இதற்கு, லீக் சுற்றில் வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் 22 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் 10 விருதுக்கான வீரர்களை ஆறு பேர் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும்.

ஒவ்வொரு பிரிவிலும் ஒருவீரர் தேர்வு செய்யப்படுவார். முக்கிய பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல்: சிறந்த பேட்ஸ்மேன்: காலிஸ், சச்சின், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ராபின் <உத்தப்பா. சிறந்த பவுலர்: ரியான் ஹாரிஸ், அஷ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், வினய் குமார், ஜாகிர் கான் சிறந்த அறிமுக வீரர்: மைக்கேல் லம்ப், அம்பாதி ராயுடு, போலார்டு, பசல், மோனிஷ் மிஸ்ரா, டெய்ட், போலிஞ்சர்.

சிறந்த பீல்டர்: ரெய்னா, போலார்டு, ஜூன்ஜூன்வாலா, டிவிலியர்ஸ், யூசுப் பதான், டேவிட் வார்னர்.

சிறந்த பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்: முரளி விஜய், உத்தப்பா, யூசுப் பதான், ஜுயன் திரான், டேவிட் வார்னர், ஹர்பஜன், வார்ன். சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்: கில்கிறிஸ்ட், பிரண்டன் மெக்கலம், தன்வீர் (2008-09).


  comment
kalaimani from India ,
2010-05-05 18:21:54.0

பெஸ்ட் பத்ச்மன் டோனி பரபரப்பான அட்டக்க்கரர் muralivijay

Murugesan from India ,
2010-04-22 10:45:39.0

சிறந்த பேட்ஸ்மேன்: சச்சின் சிறந்த பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்: முரளி விஜய்


பிரபாகரன் தாயார் சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டாரா ஏன்?
written by admin,
2010-04-17 15:55:49.0
 

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

மருத்துவ சிகிச்சைக்காகவே தான் சென்னை வந்திருப்பதாக பார்வதி அம்மாள் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டதோடு அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

தகவல் அறிந்து வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை விமான நிலையம் சென்றனர். ஆனால் அவர்களுக்கும் பார்வதி அம்மாளைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது


  comment
No comments to display.. click comment button for your comments

சானியா வீட்டில் சோயப் மாலிக்! *திருமணம் இந்தியாவில் நடக்குமா?
written by admin,
2010-04-04 11:46:03.0
 

சோயப் மாலிக் நேற்று திடீரென சானியா வீட்டுக்கு வருகை தந்து அதிர்ச்சி அளித்தார். இவர்களது திருமணம் திட்டமிட்டபடி இந்தியாவில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சானியாவுடன் மாலிக் விவாதித்ததாக தெரிகிறது. இந்தியா டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. இவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கும் வரும் 15ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. ஆனால் திருமணத்தில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் ஏற்படுவதால், திட்டமிட்டபடி இந்தியாவில் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆயிஷா மிரட்டல்:

ஐதராபாத்தை சேர்ந்த ஆயிஷா என்பவர், சோயப் மாலிக்குடன் நேருக்கு நேர் சந்திக்காமலேயே கடந்த 2002, ஜூன் 3ல் தொலைபேசி வழியாக திருமணம் செய்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தை மாலிக் மறுத்துள்ளார். இதுகுறித்து ஆயிஷா கூறுகையில்,"" என்னை முறைப்படி அவர், விவகாரத்து செய்வதாக, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,'' என்றார். ஒருவேளை விவாகரத்து செய்யாமல் சானியாவை திருமணம் செய்தால், மாலிக் மீது வழக்கு தொடர, இவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

நோட்டீஸ் வரவில்லை:

இதனிடையே ஆயிஷா சித்திக், மாலிக் மீது மானநஷ்ட ஈடு கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதுகுறித்து மாலிக் வக்கீல் ரமேஷ் குப்தா கூறுகையில்,"" இதுவரை எந்த நோட்டீசும் எங்களுக்கு வரவில்லை. அப்படி வந்த பின், அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்போம். இந்த விஷயத்தில் எப்படி செயல்படுவது என, எனக்கு எந்த தகவலும் வரவில்லை,'' என்றார்.

திடீர் வருகை:

இந்நிலையில் வங்கதேசத்தில் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்று வரும் மாலிக், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே, நேற்று திடீரென ஐதராபாத் வந்தார். நேராக சானியா வீட்டுக்கு சென்றுள்ளார். பின் பால்கனியில் தனது மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சானியா மற்றும் அவரது அம்மாவும் <உடனிருந்துள்ளனர்.

வருகைக்கு காரணம்:

ஆயிஷா வழக்கு, பால்தாக்கரே மிரட்டல் போன்ற சிக்கல்கள் உள்ளதால் சோயப் மாலிக் குடும்பத்தினர் இந்தியா வரத் தயங்குவதால், திருமணத்தை துபாய்க்கு மாற்ற வேண்டும் என, சானியா குடும்பத்தை வற்புறுத்தவே, மாலிக் திடீரென ஐதராபாத் வந்துள்ளதாக, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் தனியார் "டிவி' ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாலிக் கூறுகையில்,"" தற்போது உள்ள பிரச்னைகளால் எங்களது திருமணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் எனக்கும், சானியாவுக்கும் எந்த கவலையும் இல்லை,'' என்றார்.

உண்மை தெரியும்:

ஆனால் திருமணம் துபாய்க்கு மாற்றப்படாது. திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி, ஐதராபாத்தில் நடக்கும் என சானியா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சானியா கூறுகையில்,"" எங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. இந்த பிரச்னையில் எனக்கும் எனது குடும்பத்துக்கும், எது உண்மை என்று நன்கு தெரியும். எனது திருமண நாளுக்காக தயாராக உள்ளேன். இதைவிட மற்ற எதுவும், என்னை கவலையடையச் செய்யாது,'' என்றார்.

நான்கு முறை...

சோயப் மாலிக் திருமணம் செய்ததாக கூறப்படும் ஆயிஷா சித்திக் என்பவருன் மாலிக், நான்குமுறை வீட்டில் சேர்ந்து தங்கியிருந்ததாக ஆயிஷா தாயார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில்,"" 21 வயதான ஆயிஷாவுக்கு, ஓட்டு அளிக்கும் உரிமை உள்ளது. அவளது திருமணம் குறித்து முடிவு செய்ய போதுமான அனுபவம் உள்ளது. அப்படி இருக்கையில் உலகறிந்த ஒரு கிரிக்கெட் வீரர் மீது, எப்படி தவறாக புகார் செய்யமுடியும். திருமணத்துக்கு பின், எங்கள் வீட்டுக்கு வந்து நான்குமுறை தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் எப்படி அடுத்த பெண்ணை திருமணம் செய்ய முடியும்,'' என்றார்


  comment
No comments to display.. click comment button for your comments

நித்யானந்தா நிலை என்ன?
written by admin,
2010-03-07 11:30:53.0
 

சென்னை : ""நித்யானந்தா வீடியோ காட்சியை எடுத்த அவரது சீடர் ஸ்ரீநித்ய தர்மானந்தா, சாமியாருக்கு எதிராக கொடுத்துள்ள புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் கர்நாடகாவில் நடந்திருப்பதால், இவ்வழக்கு கர்நாடக போலீசாருக்கு மாற்றப்படுகிறது,'' என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

நித்யானந்தா, பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் இருக்கும் காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் எப்படி வெளியானது; வீடியோவை எடுத்தது யார் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், நித்யானந்தா படுக்கையறை காட்சிகளை எடுத்தது, அவரது சீடர்களில் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஸ்ரீநித்ய தர்மானந்தா என்ற லெனின், பெங்களூரு நித்யானந்தா ஞானபீடத்தில் சீடராக உள்ளார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்..

அப்புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2004ம் ஆண்டு நித்யானந்தா மீது பக்தி ஏற்பட்டு, 2006ம் ஆண்டு முதல் பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சேவை செய்து வருகிறேன். ஆசிரமத்திற்கு வரும் அழகான அப்பாவி பெண்களிடம், தான் கிருஷ்ணர் அவதாரம் என நித்யானந்தா கூறி, அவர்களை கோபியர் எனக் கூறி கட்டிப் பிடிப்பார். அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர், ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். ஆசிரமத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்ததுடன், ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். குறிப்பாக, நடிகை ரஞ்சிதாவிடம் நித்யானந்தா அடிக்கடி உல்லாசமாக இருப்பதைக் கண்டு, என் வாழ்க்கை பாழாக்கப்பட்டதை உணர்ந்தேன். நித்யானந்தா, லட்சக்கணக்கான பக்தர்களையும், சீடர்களையும் ஏமாற்றும் செயலை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், கடந்த ஆண்டு டிசம்பரில் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக படம் எடுத்தேன். ..

இதை அறிந்து, பிப்ரவரி 18, 19ம் தேதிகளில் சேலம், சீரகப்பாடியில் புதிய ஆசிரம திறப்பு விழாவிற்கு சென்றபோது, நித்யானந்தா தனது வேனுக்குள் அழைத்தார். அங்கு, "படம் ஏதாவது எடுத்தாயா? கொலை செய்து விடுவேன்' எனக் கூறி, அவரும், அவரது சீடர்களும் மிரட்டினர். அவர்களிடம் கழிவறைக்கு செல்வதாகக் கூறி, அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். நித்யானந்தாவை நம்பியுள்ள அப்பாவி இந்துக்களையும், இந்து மக்களையும் அவரிடமிருந்து காப்பாற்ற, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தர்மானந்தா புகாரில் கூறியுள்ளார். நித்யானந்தாவின் படுக்கையறை காட்சிகள் அடங்கிய ஒரு "சிடி'யையும் போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார். ..


  comment
shiva from India ,
2010-07-13 12:46:29.0

ஐயா தமிழ் நாட்டு பெரியவர்களே நீங்கள் எல்லாவற்றயும் மறப்பவர்கள் மன்னிப்பவர்கள் தானே சாமியாரையும் மன்னியுங்கள் இல்லை என்றால் இப்போதைய துனைமுதவர் நாளைய முதல்வர் அவருக்கும் தானே தண்டனை கொடுக்கணும் சாமியாரிடம் பெண்கள் உல்லாசமாக இருக்க போனார்கள் நம்ம துணை முதல்வரோ கடத்தி போனாரே மறந்துட்டிங்களா

kalai from India ,
2010-06-04 15:56:30.0

கண்டிப்பாக நித்தியானந்தா வை அந்தமான் ஜெயிலில் போடவும்

Kathirmagan from India ,
2010-03-29 12:13:30.0

The philosophy of Hinduism is the most popular, old and renowned one amoung the philosophies of the rest. Nithyananda, Jayendra saraswathi (kanchi) and Devanatha Gurukkal like pseudo sadhus/purohits should be punished and they should be sentenced for life in the jail. It is a sad pity that still people are there to defend and protect these persons. It is also surprising to note that the police and justice are keeping quiet even after the facts have come to the light.

Murugan from India ,
2010-03-24 12:00:02.0

இதில் விமர்சனம் கொடுத்துள்ள முரளி போன்ற நபர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இப்படிப்பட்ட முட்டாள்கள் இருப்பதால் நித்தியானந்த போன்ற பொறிக்கி சாமியார்கள் ஒரு நாளும் ஒழிய மாட்டார்கள்.

Narayanan from India ,
2010-03-23 15:04:12.0

மக்கள் மடையர்கள் அவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு வோட்டு போடுவது போல் நித்தியானந்தவுக்கும் வோட்டு போடுவார்கள்.

sekar from India ,
2010-03-23 12:46:29.0

I was surprised by the comments of Murali. Yes I agree one cannot go into the private life of an individual. But here Nityananda is a public figure and he has to show in practice what he preachers. Otherwise his teaching is useless. Every one including the intelligent people want to see whether one is truthful to himself or to his teaching. I am sorry for your comments.

rajagopal from India ,
2010-03-23 08:38:21.0

Kindly probe all activities of all the Godman In and around Chennai.The probe should cover financial irregularities,foreign travel,foreign stay,donation acceptance under Fema act.If the Godman is running school or colleges extensive probe to find out any coercion or Child abuse

ashok from India ,
2010-03-21 18:40:40.0

இவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் இல்லையென்றால் இவர் போல் போலி சாமியார்கள் இந்த திருநாட்டில் தோன்றுவார்கள். அவரை கைது செய்

aaru from India ,
2010-03-21 16:53:36.0

இந்த மாதிரி ஆட்களை நடுரோட்டில் நிற்கவைத்து மக்களால் செருப்பால் அடிக்கப்பட்டு துக்கில் போட்டால் தான் சாமியார் என்ற பெயரில் எவனும் உருவகமாட்டர்கள்.

ganesh from India ,
2010-03-21 14:55:21.0

nithyanandharin "SEVAI" tamilnattukku thevai. nithyanandha enbavar ilaingnargalin vazhikatti.

karthi from India ,
2010-03-21 14:50:02.0

intha mathiri saamiyarungala ellam nikka vachu.........................sudanum.

Murali from India ,
2010-03-19 14:11:24.0

Bodily activities have nothing to do with spiritual activities. I am sure of Nithyanandas' vast knowledge capabilities within a very young age of 20+ which attracted the world, is simply great. He is an asset to Human race. Forget his playfulness and get interested in his teachings which can lead you to happiness. As far as I am concerned I would suggest that the person who is behind this dirty business interfering in ones' private life be arrested and punished. If such activities are entertained it is not long that there would be only news of private life exposure of all great religious preachers, politicians, leaders, teachers, professionals etc. be published by the media. Privacy in bodily needs is a must in every Human life otherwise we are no different than animals. I feel ashamed that people are so foolish in judging a person with a silly matter in his private life. Mr. Nithyananda, ?there is great need to our people to be educated in such matters. Please help them by continuing your service of great knowledge you have attained. I am very sure the intelligent ones will back you up. I know you care nothing to the corrupted ones, and would forgive them?. I request those who are all of my opinion, to come together and strengthen the service of our country fellowmen Mr. Nithyananda to uplift the human consciousness and add glory to the Human race.

sara from India ,
2010-03-18 14:45:23.0

super samiyar

vasukidasan from India ,
2010-03-18 14:29:26.0

மற்ற தேசத்தினர் பெருமையுடன் மதிக்கும் நம் இந்திய தேசத்தை,இந்துத்துவத்தை பாழ்படுத்தும் இந்த மாதிரியான சாமியார்களை தூக்கிலிடும் தண்டனை தரும் நக்கீரனுக்கு தலைவணங்குகிறேன்.

vasukidasan from India ,
2010-03-18 14:11:05.0

Mr.Sathyaraj told about themselves they are know, very well,"there is no God" - (Nithyanantha & kanjipura Kamugan)

rajanragul from India ,
2010-03-18 00:13:05.0

saamiyar business over. Ippo avarai vaithu business. Yappappa pollatha aalungappa.

ahmed from India ,
2010-03-17 12:46:24.0

he should be shot in the middle of the road.

s. kulothungan from India ,
2010-03-16 19:25:57.0

bramhachariyathin perumaihalai ubadesikkum samiyar lowheha vazhkayil eedupattirundhal athu maperum kutrame!

SRINI from India ,
2010-03-16 12:46:54.0

enna coment solla evaru miga priya arasiyal vaathee

muthu from India ,
2010-03-13 16:20:11.0

nithyananda young men.thats y he need young girl. banjum neruppum pathikichu. Ranjitha kalai amikku kaiyai amikku kadaisiyil enge engeYO amikkiren

Murugan from India ,
2010-03-13 11:30:07.0

நான் சட்டரீதியாக தவறு செய்யவில்லை என்று கூறும் நித்யானந்த சாமி மத ரீதியாக தவறு செய்துள்ளதற்கு கடவுள்தான் தண்டனை கொடுக்கவேண்டும் .

dinesh from India ,
2010-03-12 19:02:48.0

கண்டிப்பாக நித்தியானந்தா வை அந்தமான் ஜெயிலில் போடவும்

siva from India ,
2010-03-12 18:03:54.0

NEETTALUM MAZHITHALUM VEANDAAM ULAGATHAAR PAZHITHATHU OZHITHUVIDIN. ---THIRUKKURAL. EARPATHUM MARUPPATHUM VENDAAM NAMAKKENA\ VIDITHATHU NADAKKUMENIL. ---APPAVI-SIVA-KURAL

karthik from India ,
2010-03-11 19:51:10.0

நோ comends

ram from India ,
2010-03-11 17:50:54.0

நித்தியானந்தா மீண்டும் அவரால் மக்களிடம் நல்ல பெயர் வாங்க முடியாது

PADMANABHAN from India ,
2010-03-11 13:30:19.0

Nothing wrong Nithyanantha, He is Young, having wealth , health, name, fame & power. Three thinks con't escape from human life 1. Food 2.Sleep 3.Sex His only big mistake teaching "Pramachariam" to others but he not follows. Other wise both having sex is their personnel. But catching it to telecost & media is highly punichable mistakes. Its a big shame compare with Sex Scandal of Nithyanatha.

babu from India ,
2010-03-10 21:04:51.0

ஊறுக்கு உபதேசம் செய்யும் சாமியார் ஒழுங்காக இருக்க வேண்டும் பொண்ணு வேணும்னா உபதேசத்த விட்டுட்டு எப்பிடு வேனுமன்லும் இரு யர்ர் கேட்க போறாங்க

preetha from Canada ,
2010-03-10 19:38:17.0

samuthayathla periya manusana erunthu avnga pannura aniyayaggala nakkeeranala munnukku kondu varamudinthathu romba perumayana visayam. but.......... entha aasamiyala pathikkapaddavangala nakkeeran than kaappaththanum....... mana ninmathaya thedi poora makkala eppidi pannurangale.................yarathan namburathu????

gemini from India ,
2010-03-07 20:05:39.0

yathu yappatiyo oru periya manithanai acinga patuththanumnu mutivu pannittinga atha yaarala thatukka mutiyum& wait and see...........................................................................................

nalagappan from India ,
2010-03-07 15:12:17.0

ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில் மிக திறமைசாலிகள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகயுள்ளது. ஆனால் பார்ப்பவர்களை முகம் சுளிக்கவைக்கும் காட்சிகளை அத்தனை முறை ஒளிபரப்பியது சமுதாய தீங்கு அல்லவா. பொறுப்புடன் செயல்படும் அவசியம் நமக்கும் உண்டு என்று ஊடகங்கள் உணரட்டும்


மக்கள் கருத்துக்காக 2010-11: பட்ஜெடின் முக்கிய அம்சங்கள்
written by admin,
2010-02-27 12:14:12.0
 
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
  1. -டிராக்டர்கள், மொபைல் போன்கள், சிமென்ட் ஆகியவற்றுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலையும் உயருகிறது.
  2. -ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிப்பு
  3. -ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்
  4. -கூடுதலாக பல சேவைகளுக்கும் வரிகள் விதிக்கப்படும்
  5. -விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு
  6. (பட்ஜெட்டுக்கு இந்திய பங்குச் சந்தையில் வரவேற்பு, பங்கு விலைகள் உயர்வு)
  7. -டிவி, ப்ரரிட்ஜ், ஏசி விலையும் உயருகிறது
  8. -தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
  9. -மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து
  10. -சிடி விலை குறையும்
  11. -பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீணடும் 5 சதவீத கலால் வரி
  12. -இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 கிராமுக்கு ரூ. 300 சுங்க வரி விதிக்கப்படும். இதனால் தங்க நகை விலை உயரும்.
  13. -அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்
  14. -பெட்ரோல், டீசல் விலை உயரும்
  15. -பெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு
  16. -(பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரியை கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு)
  17. --பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு
  18. -கலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு
  19. -கார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு
  20. -சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு
  21. -இந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்
  22. -நீண்டகால அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ. 20,000 முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்கும்
  23. -இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.
  24. -ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்
  25. -ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)
  26. -ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்
  27. -ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்
  28. -பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு
  29. -உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்
  30. -பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  31. -ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி
  32. -இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது
  33. -திட்ட செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது
  34. -மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்
  35. -பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி
  36. -சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 2600 கோடி
  37. -ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை.
  38. -ரூ. 1000 கோடியில் அங்கீகரிக்கப்படாத தொழில் பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு [^] நிதியம்.
  39. -ஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,000 கோடி ஒதுக்கீடு
  40. -குறைந்த விலை வீடுகளுக்கான மானியம் நீட்டிப்பு. குடிசையில்லா நகர்களை உருவாக்க திட்டம்
  41. -மகளிர், குழந்தைகள் நலனுக்கு ரூ.22,300 கோடி
  42. -தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்ட்'
  43. -தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம்
  44. -மகளிர், குழந்தைகள் நலனுக்கான நிதி 50 சதவீதம் அதிகரிப்பு
  45. -நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி
  46. -இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி
  47. -புந்தல்கந்த் வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி
  48. -2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வஙகிகள் திறக்கப்படும்
  49. -பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி
  50. -தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு
  51. -பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ரூ. 31600 கோடி
  52. -சுகாதாரத் துறை திட்டங்களுக்கு ரூ. 22,300 கோடி
  53. -இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது
  54. -2022ம் ஆண்டில் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்
  55. -ஊரக வளர்ச்சிக்கான நிதி 25 சதவீதம் அதிகரிப்பு
  56. -உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா தயார்
  57. -மின் சக்தித் துறைக்கு ரூ. 5130 கோடி
  58. -சாலை கட்டமைப்பு வசதியைப் பெருக்க ரூ. 19894 கோடி
  59. -அடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ரூ. 1.73 லட்சம் கோடி
  60. -மரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.
  61. -தேசிய மாசு இல்லா எரிபொருள் நிதியம் அமைக்கப்படும்
  62. -விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்
  63. திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.200 கோடி
  64. வங்கித் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை
  65. சில்லறை வர்த்தகம் தொடர்பான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
  66. -2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.
  67. -5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும்
  68. -தினந்தோறும் 20 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்
  69. -அதிக பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்
  70. -நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு 13 சதவீத கூடுதல் நிதி
  71. -வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
  72. -வட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி
  73. -ஏற்றுமதியை ஊக்குவிக்க 2 சதவீத வரி சலுகை நீட்டிப்பு
  74. -அரசு வங்கிகள் விவசாய கடன்களை அதிக அளவில் அளித்து வருகின்றன
  75. -ஊரக வங்கிகளை மேலும் ஸ்திரப்படுத்த கூடுதல் நிதி
  76. -விவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம்
  77. -அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 16,000 கோடி உதவி
  78. -பெட்ரோலிய விலைகள் குறித்த பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்க யோசனை
  79. -2 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்
  80. -வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை மேலும் எளிமையாக்கப்படும்.
  81. -மேலும் அதிக தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ்கள் தரப்படும்
  82. -சமூக பொருளாதார திட்டங்களுக்கு அதிக நிதி
  83. -தனியார் முதலீடுகளால் 9 சதவீத வளர்ச்சி நிச்சயம் சாத்தியம்
  84. -நேரடி வரிகள் தொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் புது திட்டம்
  85. -உரங்கள் மீதான மானியம் குறைக்கப்படும்
  86. -இந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ. 25,000 கோடி அரசு முதலீட்டை வாபஸ் பெற இலக்கு
  87. -விரைவில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்
  88. -அரசுச் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  89. -இரண்டு இலக்க பணவீக்கம் பெரும் கவலையளிக்கிறது
  90. -உலக பொருளாதார சிக்கலால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சலுகைளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது
  91. -உற்பத்தித்துறை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது
  92. -பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம்-விலைவாசி உயர்ந்தது
  93. -உலக பொருளாதார சிக்கலை இந்தியா திறம்பட சமாளித்தது
  94. -உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி
  95. -ஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
  96. -அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே முக்கிய இலக்கு
  97. -8 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட பொருளாதாரம் சிறப்பாக உள்ளது
  98. -தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் உணவு உற்பத்தி பாதிப்பு
  99. -கடந்த பட்ஜெட்டின்போது பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது நிலைமை மிகவும் முன்னேறியுள்ளது

மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்


  comment
gamage from Sri Lanka ,
2010-03-26 10:51:42.0

அவனை கொள்ளுங்கள்.தைரியமாய் கொள்ளுங்கள் பாவம இல்லை . இந்திய அரசியல் வாதி அவனை கபத்துவன் . இந்தியனே அவனை கொள்ளு .ஜே ஹிந்த்

hemalatha from India ,
2010-03-25 13:12:11.0

யமருபார்கள் இருக்கும் வரை எமாற்றிகொண்டுதான் இருப்பார்கள் .மக்கள் விழிபுனர்வுடநிருகவண்டும் .தயவு செய்து கடவுளை நம்புங்கள் .சாமியார் மேரி சம்பர்களை நம்பவேண்டாம் .இது அன்பு கட்டளை .........

Deva from India ,
2010-03-20 19:10:46.0

The Government had promised to increase the limit of tax exemption. But nothing has been done. This brings great disappointment among the salaried ppl. But small business owners earns several lakhs without paying a single penny for tax.

mohamedrijuvan from India ,
2010-03-10 17:56:03.0

supr

^ishishk from India ,
2010-03-07 04:40:13.0

இடஒதுக்கிடு சலுகை பெற ஆண்டு வருமான உச்ச வரம்பை நாலரை லட்சதிருந்து ஆறு லட்சமாக உயர்த்த ஏதும் சொல்லவில்லை.

^ishishk from India ,
2010-03-07 04:32:56.0

கல்லூரிகளில் படிக்க வங்கி கடன் வட்டி ரத்து செய்வோம் என முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சென்ற வருடம் சொன்னார்.நிதி நிலை அறிக்கையில் அதை பற்றி ஏதுமில்லையே ?

sivakumar from India ,
2010-03-05 12:58:56.0

Vanakkam. Private Banks Personnel Loan Repayment vanka antha vankikalin collection executives thakatha varthaikalal customer manathu punpadum padi pesukirarkal.. veli nattu vankikalin staffs ippadi pesuvathu entha vakaiyil gnayam.. atharku namathu arasangam enna nadavadikai edukka pokirathu ?


நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தால், இரண்டு லட்சம் மாணவர்களுக்கு கண்டிப்பாக பாதிக்கப்படுவார்களா?
written by admin,
2010-01-23 11:51:07.0
 

மத்திய அரசு, 44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால், இரண்டு லட்சம் மாணவர்கள், 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். எந்த பாதிப்பும் வராது என்று, மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

ஒரு சில கல்லூரிகளில் குறைகள் இருக்கலாம். குறைகளை சுட்டிக்காட்டி, கால அவகாசம் தாருங்கள். அதற்குள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து விடுகிறோம். அதன்பின், கல்லூரிகளில் மீண்டும் ஆய்வு செய்து, அங்கீகாரத்தை தொடர அனுமதிக்க வேண்டும். கப்பல் கட்டுமான படிப்பு, துறைமுகம் கட்டுமான படிப்பு போன்றவை, அரசு பல்கலைகளில் படிக்க வாய்ப்பில்லை. நிகர்நிலைப் பல்கலைகளில் படித்த அனைத்து மாணவர்களுக்கும், படிப்பு முடிவதற்குள் வேலை கிடைக்கும் அளவுக்கு உயர்கல்வி தரமாக இருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக் கழகம் தான், இந்தியாவில் முதன் முதலாக கடல்சார் பல்கலைக் கழகத்தை துவக்கியது. அதன்பின், மத்திய அரசு கடல்சார் பல்கலைக் கழகத்தை உருவாக்கியது. பல்கலைக் கழக மானியக்குழு, கல்லூரிகளுக்கு வந்து பல சோதனைகளை நடத்தியது. கல்வி சம்பந்தப்பட்ட செயல்முறை கூடங்களை நேரடியாக ஆய்வு செய்தது. பேராசிரியர்களிடம், மாணவர்களிடம் அக்குழு கலந்து பேசிய பின் திருப்தியாக சென்றனர். மத்திய அரசின் கண்காணிப்பு குழு நேரடியாக ஆய்வு நடத்த வராமல், திடீரென நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் தான் உயர்கல்வித் தரம், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நைஜீரியா உள்ளிட்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், நிகர்நிலைப் பல்கலைகளில் படித்து வருகின்றனர். அரசு விதிமுறைகளை பின்பற்றி தான், நிகர்நிலைப் பல்கலைகள் நடக்கின்றன. மாணவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடிய பட்டப் படிப்புகளைத் தான், நிகர்நிலைப் பல்கலைகலைகள் நடத்தி வருகின்றன. ஆராய்ச்சியார்கள் மற்றும் கல்வித்தரம் வாய்ந்த அனுபவமிக்க ஆசிரியர்கள் தான், நிகர்நிலைப் பல்கலைகளில் பணிபுரிகின்றனர். அவர்களின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாக உள்ளது.


  comment
BASKARAN from Saudi Arabia ,
2010-03-18 19:01:00.0

My daughter joined in Dr.MGR University in 2009. since 1st week of march, college classes are suspended and now they say that there will not be any more classes for this semester and exams will be in May. This semester they have not even conducted 60 days classes. Education has become a joke in our country and neither the ruling politicians nor the college management think of the psychological mental stress 1st on the Students and 2nd on the Parents. I request Sri.Gopal for rescue these students.

Vaithianathan from India ,
2010-03-07 16:15:41.0

இது திருட்டுத்தனம். மாணவர்களை ஏமாற்றும் பணம் பிடுங்க செய்யும் ஏற்பாடு

Ramkumar from Germany ,
2010-01-29 10:31:11.0

காச வாங்கிக்கிட்டு university தரும் போதே யேசிக்காம இப்ப என்ன டிராமாவ ....


தப்பாகவே புரிந்து கொள்ளப்படும் சரியான நபர்
written by admin,
2009-12-27 18:08:41.0
 

கலைந்த தலைசாதாரண அரைக்கை சட்டைபழுப்படைந்த கால்சட்டைரொம்ப சுமாரான செருப்புதோளில் ஒரு பெரிய பைஇத்தகைய தோற்றத்துடன் கடந்த 22ம்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டப வாசலை நோக்கி தன்னந்தனியே ஒருவர் நடந்து வந்தார்.அவர் வேறு யாருமல்லஉடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆன்டிபயாடிக் மருத்துவ தன்மை கொண்ட ரிபோசம் கூறுகள் என்ற மனித குலத்திற்கு தேவையான மகத்தான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றதன் மூலம் உலக புகழ் பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் தான் அவர்.பரிசு பெற்றதும் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. அதிலும், அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர் என்று தெரிந்தபிறகு, கொஞ்சம் கூடுதலாக இந்தியாவில் இருந்தும் அதைவிட கூடுதலாக தமிழகத்தில் இருந்தும் பாராட்டுகள் சென்றன.அவர் நன்றியோ, பதிலோ தெரிவிக்கவில்லை. உடனே மனிதர் இங்கிதம் தெரியாதவர் என்ற விமர்சனம் எழுந்தது.எனக்கு கிடைத்த பரிசை ஏற்பதிலேயே இன்னும் உடன்பாடில்லை. அத்துடன் இந்த பாராட்டு, வாழ்த்து போன்ற சம்பிரதாயங்கள் எனக்கு ஒத்துவராது. ஆகவே என்னை தொந்திரவு செய்யாதீர்கள் என்று விளக்கமளித் தார்.இந்த விளக்கம், இன்னும் இவரை தப்பானவராக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.

எனது ஆராய்ச்சிக்கே எனக்கு நேரம் போதாவில்லை. எனது இ-மெயிலில் வரும் தகவல்களை படிக்க நேரம் ஒதுக்கவே சிரமமாக உள்ளது. இந்த நிலையில், வரும் மெயில்களில் எது பாராட்டு ரீதியானது எது எனது ஆராய்ச்சி ரீதியானது என்று பிரித்து படிக்கும் சிரமம் வேறு. நான் பாராட்டுகளை பார்ப்பதே இல்லை அது எனக்கு தேவையும் இல்லை என்றார் ஆணித்தரமாக....இப்படி ஒரு வித்தியாசமானவரா என்று பார்ப்பதைவிட்டு, நம்மவர்கள் இவரை, ஒரு விசித்திரமானவராக பார்த்தனர்.

பிறகு, நோபல் பரிசு பெற்று உலகம் முழுவதும் இவரது பெயரும்,புகழும் ஒரே நாளில் பரவ பலரும் அவரை பாராட்டி மகிழ அழைக்க, அவர் கூலாக நேரமில்லை என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார்.சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரோ உங்களுக்கு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க விரும்புகிறது என்று சொல்லியிருக்கிறார். வேறு யாரும் என்றால், எப்ப தர்றீங்க...என்று கேட்டு அடுத்த பிளைட் பிடித்து பறந்து வந்திருப்பர், ஆனால், இவரோ அதெல்லாம் எனக்கு பிடித்தமில்லை. மன்னிக்கவும் என்று கவுரவ டாக்டர் பட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

சரி, இங்குள்ள சாதாரண பள்ளிகளில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களிடம் பேசவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் வாருங்களேன் என்றதும் சரி வருகிறேன் என்று சொல்லி வந்துவிட்டார். வந்தபிறகு நடந்த விஷயங்கள்தான் முக்கியமானவை. பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த இவரை படகு காரில் சம்பிரதாயப்படி அழைத்து வர சென்றால், அவரோ இதோ இருக்கிற மண்டபத்திற்கு கார் எதுக்கு என்று நடையில் கிளம்பிவந்துவிட்டார்.விழா மேடைக்கு வந்ததும் நடு நாயகமாக உட்காரமல், ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டார். தனது தோள் பையில் இருந்து லேப்-டாப் எனப்படும் மடிக்கம்ப்யூட்டரை எடுத்து, தானே கனெக்ஷன் கொடுத்து பேச ஆரம்பிக்கலாமா? எனக்கேட்டதும் இருங்க சார். வரவேற்புரை, வாழ்த்துரை எல்லாம் இருக்கிறது என்று கூறி உட்கார வைத்தனர்.

பிறகு வேறு வழியில்லாமல் அந்த சம்பிரதாயங்களை வேண்டா வெறுப்பாக பார்த்துக்கொண்டு இருந்தார்.ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இந்த மாபெரும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் வெற்றிக்கு பின்னாலும் உள்ள பெண் மணி அவரது துணைவியார் தான். இப்போது அவரை மேடை ஏற்றி கவுரவிக்கிறோம் என்றதும் இங்க அவுங்களுக்கு என்ன வேலை அதான் ரூம்லேயே விட்டுவிட்டு வந்துட்டேன். அதனால அதெல்லாம் வேண்டாம் விஷயத்திற்கு போவோமா... நான் பேசலாமா என்று நமது விஞ்ஞானி எழுந்து கொண்டார்.நான் தமிழன் என்றோ, இந்தியன் என்றோ பெருமை படுவதைவிட ஒரு விஞ்ஞானி என்பதில்தான் அதிகம் பெருமை அடைகிறேன். நான் மூன்று வயதிலேயே லண்டன் போய்விட்டேன். ஆகவே தமிழ் சுத்தமாக வராது. மன்னிக்கவும் என்று கூறிவிட்டார்.நமது நாட்டு விஞ்ஞானிகள் நம் நாட்டிலேயே ஆராய்ச்சி செய்ய முன் வரவேண்டும் என்று பிரதமர் கூப்பிட்டு இருக்கிறார். நல்லதுதான். ஆனால், அதற்கான சூழலை இங்கே உருவாக்க வேண்டும். அத்தகைய சூழல் சீனாவில் இருக்கும் அளவு கூட இங்கே உள்ளதா என்பது கொஞ்சம் சந்தேகம் தான். தவிர, இங்கே அரசியல் மற்றும் அதிகாரிகளின் தலையீடு கொஞ்சம் அதிகம் இருக்கும் என்ற பயமும் உண்டு. பரிசுக்காகவும், பாராட்டிற்காகவும் உழைக்க ஆரம்பித் தால், அதில் கவனம் சிதறும். விஞ்ஞானியாக வரவேண்டும் என்று உழைக்கலாமே தவிர நோபல் பரிசு பெறும் விஞ்ஞானியாக வரவேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை.எனது பொறுப்பு என்பது, நான் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாக மட்டுமே இருக் குமே தவிர, மற்றவர்களின் ரோல் மாடலாக இருப்பதோ இந்தியாவில் உள்ள மாணவர்களை வழிநடத்திச் செல்வதோ அல்ல. அவரவர்கள் அவரவர் அடையாளத்துடன் மேலே வரவேண்டும்.

நான் விசிட்டிங் புரபசராக வருவது, கவுரவ பேராசிரியர் பணி ஏற்பது இதற்கெல்லாம் பார்க்கலாம் என்று சொன்னால் கூட அது பொய்யாகத்தான் இருக்கும். என்னால் முடியாது என்பதே உண்மை அதற்கு மேல் வற்புறுத்த வேண்டியது இல்லை.இப்படி வார்த்தைக்கு வார்த்தை சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டவராக செயல்பட்டவர், தனக்கு போடப்பட்ட மாலை, கொடுக்கப்பட்ட பூங்கொத்து, போர்த்தப் பட்ட பொன்னாடை, வழங்கப்பட்ட நினைவு பரிசு என அனைத்தையும் மேடையின் ஒரு ஓரத்திலேயே போட்டுவிட்டு தான் கொண்டு வந்த பழைய பையை தூக்கிக்கொண்டு மீண்டும் தனியாக தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.நமக்கு என்னவோ இவர் பலரால் தப்பாக புரிந்து கொள்ளப்பட்ட சரியான மனிதராகவே காணப்பட்டார்.


  comment
Amudharasan from India ,
2010-04-01 13:37:17.0

He may have many works (Research). He don't find any time to concentrate on other areas. That's why he is hesitating. We wish him for his achivement. We should not find faulti on him.

chandramouly from India ,
2010-03-20 22:17:48.0

kill sir Antha Men vallthukkai Makkalee. Vallaan Oruvan Vaikkal Vagukka Vanthuveeitan

RAHEEM from India ,
2010-03-20 20:42:37.0

உலகம் நாகரீகம் எனும் போதையில் தன்னை மாய்த்து கொள்ளும் போது இயல்பான மனிதர்கள் என்றும் ஆச்சர்யமானவர்களே

sathish from India ,
2010-03-16 15:45:33.0

செய்யறது எல்லாத்தையும் செஞ்சிட்டு இப்ப ஆராய்ச்சி பண்ணேன், புக் எழுதினேன் நு சப்ப கட்டு போட்டா அவரோட சுய அறிவு இல்லாத பக்தர்கள் வேணும்னா நம்புவாங்க. பொது மக்கள் நம்பமாட்டாங்க. அவர் ஆராய்சிய கர்நாடகாலையே பண்ணிக்கட்டும் இங்க தமிழ்நாட்ல வந்தா இந்த கலியுக கிருஷ்ணன் கு பல கம்சன் இருப்பாங்க.

arjunan from India ,
2010-03-06 14:47:39.0

nam thalaivargal thenam thenam oru vila eatukavendum eana pathaviay payanpatuthi miratty valum arpamanithar matheyle nalla manithenai partha santhesam

nimesh from India ,
2010-01-26 14:58:32.0

ada அவரை பார்த்து வாழ்வதற்கு நம்ம மக்கள் குறிப்பாக அரசியல்வாதிகள் கத்துக்கணும்

saker from India ,
2009-12-27 18:18:40.0

நேற்று வரை ''''நோபல்'''' பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானியாக என் பார்வைக்கு பட்ட Mr.ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன்,.... நாம் எப்படி வாழ வேண்டும் என எண்ணுகிறோமோ? அது போல வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ''''மாமனிதர்'''' என்று தெரிந்ததும், மனது உவகையால் பூரிப்படைகிறது.. உண்மையிலேயே இந்தியர்களால் தப்பாகவே புரிந்து கொள்ளப்படும் மிக மிக சரியான மனிதர்....மாமனிதர


 
 1  2   3     Next     Last